விழிப்புணர்வு ஊர்வலம்
சாத்துார்: சாத்துார் சல்வார் பட்டி சி.இ.ஒ.ஏ., பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் ஊர்வலம் சென்று மரம் வளர்ப்போம் உயிர் காப்போம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலத்தில், தேசிய மாணவர் படை, மாணவ இசைக்குழுவினர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கிருஷ்ணன் கோயில் முதல் பஸ் ஸ்டாண்டு வரை ஊர்வலம் நடந்தது. டிராபிக் இன்ஸ்பெக்டர் சீமான், பள்ளி தாளாளர் சிவப்பிரகாசம் முதல்வர் தாட்சாயினி தேவி, மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.