உள்ளூர் செய்திகள்

நியூயார்க்கில் ஐ.ஐ.டி.,

நியூயார்க் நகர பொருளாதார மேம்பாட்டு கழகம் (என்.ஒய்.சி.இ.டி.சி.,) மும்பை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்திடம் "அப்ளைடு சயின்ஸ்&'படிப்புகளுக்கான பிரத்யேக வளாகத்தை அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வளாகத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியுதவி, நிலம் போன்றவற்றை வழங்குவதாக என்.ஒய்.சி.இ.டி.சி., உறுதியளித்துள்ளது என மும்பை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் தேவாங் காக்கர் தெரிவித்துள்ளார். தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் ஒன்றாக திகழும் மும்பை ஐ.ஐ.டி., வளாகம் நியூயார்க் நகரில் அமைவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் தெரிவித்துள்ளார். இலவச மல்டி மீடியா பயிற்சி "நேஷனல் பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்&' (என்.எப்.டி.சி.,) ஒரு மாத கால இலவச மல்டிமீடியா பயிற்சியை வழங்க உளளது. இந்த பயிற்சி படிப்பு, ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேர 18ல் இருந்து 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான நேர்முக தேர்வு சென்னை என்.எப்.டி.சி.,யின் எழும்பூர் அலுவலகத்தில் பிப்., 14, 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. பிப்., 21ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு துவங்குகின்றன. மேலும் விபரங்களுக்கு: 044  2819 3305


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்