உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

திருப்பூர்: கடந்த மார்ச் 4ல் துவங்கி 25ம் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 633 மாணவர்கள், 284 தனித்தேர்வர்கள் தேர்வெழுதினர். கடந்த மார்ச் 30ல் மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையத்துக்கு, விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 3, 4ம் தேதிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டது.விடைத்தாள் திருத்தும் பணி குமார்நகர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் துவங்கியது. 215 பேர் இப்பணிகளில் ஈடுபடுவர். 25 ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறும். மே, 14ல் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்