பிளஸ் 1 தேர்வு முடிவு ஆய்வு கூட்டம்
கோவை: பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது. கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இரண்டு தலைமையாசிரியர்கள் கொண்ட சிறப்பு குழு பள்ளிகளின் முடிவுகளை ஆய்வு செய்தனர். முதல்கட்டமாக, நேற்று அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று மெட்ரிக் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் ஆய்வு செய்து ஒப்புகை வழங்கப்படவுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் மற்றும், சிறப்பு குழுவின் ஒப்புகை பெற்ற பின், பிளஸ்1 தேர்வு முடிவுகளை பள்ளி நிர்வாகங்கள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, ஆய்வு பணிகள் முடிந்த அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில், பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.