உள்ளூர் செய்திகள்

ஜூலை 1 முதல் எம்.இ.,எம்.டெக்., விண்ணப்பங்கள்

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது. இப்படிப்புகளில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், ஜூலை 1 முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும். சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையம், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாணவர்கள் 500 ரூபாய் கட்டணம் (எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாய் கட்டணம்) செலுத்தி, விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை, ஜூலை 14ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்