செப்., 11ல் முதுநிலை நீட் தேர்வு
புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வு, செப்டம்பர், ௧௨ல் நடக்கும் என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், &'முதுநிலை மருத்துவ படிப்புக்கான, &'நீட்&' நுழைவுத் தேர்வு, செப்., 11ல் நடக்கும்&' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார். இந்தத் தேர்வை, ஏப்ரல், 18ல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.