தமிழகத்தில் 1,100 பணியிடங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சமூக பாதுகாப்பு சார்நிலைப் பணி, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி, தமிழ்நாடு பதிவுத்துறை சார்நிலைப் பணி, தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலைப் பணி, உள்ளாட்சி நிதி தணிக்கை சார்நிலைப் பணி, தமிழ்நாடு வேளாண் விற்பனை சார்நிலைப் பணி, தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை சார்நிலைப் பணி, தமிழ்நாடு அமைச்சகப் பணி ஆகிய துறைகளில் 1083 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அமைச்சகப் பணி ஆகிய துறைகளில் 78 இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான தகுதி மற்றும் இதர விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே பணி நியமன ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்படும். அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை உத்தேசமானது என்றும் நிலைமைக்கேற்ப காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் டிசம்பர் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பணிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: www.tnpsc.gov.in