உள்ளூர் செய்திகள்

நவ., 16 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நவ. 16-முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி ஊரடங்கு இன்று இரவு நிறைவடைகிறது.ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடந்தது. அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு இன்று மேலும் சில தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:* நவ. 16-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க அனுமதி.* நவ. 16 முதல் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவன விடுதிகள் திறக்க அனுமதி.* பொழுது போக்கு பூங்காங்களும் திறக்க அனுமதி.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்