உள்ளூர் செய்திகள்

மைசூரின் 16 உட்பட கர்நாடகாவின் 46 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

மைசூரு: மைசூரில் 16 பொருட்கள் உட்பட கர்நாடகாவின் 46 பொருட்களுக்கு புவிசார் குயிறீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.புவியியல் குறியீடு என்பது, ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்துடன், தொடர்புடைய தயாரிப்பு அல்லது தயாரிப்புகளின் வரம்பின் தனித்துவமான அடையாளத்தை குறிக்கிறது. தலைமுறை தலைமுறையாய கடத்தப்படும் பொருளின் தனித்துவமான பண்புகள், பாரம்பரியத்தை பாதுகாத்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.இத்தகைய மதிப்புமிக்க புவிசார் குறியீடு, மைசூரின் 16 உட்பட கர்நாடகாவில் மொத்தம் 46 தயாரிப்புகளுக்கு இதுவரை ஜி.ஐ., எனும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் 20 கைவினை பொருட்கள், 22 விவசாய பொருட்கள், 3 உற்பத்தி பொருட்கள், ஒரு உணவு பொருள் என 46 தயாரிப்புகளுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.மைசூரின் நஞ்சன்கூடு வாழைப்பழம், மைசூரு மல்லிகை, மைசூரு வெற்றிலை, மைசூரு பட்டு, மைசூரு அகர்பத்தி, மைசூரு ரோஸ்வுட் பதித்தல், மைசூரு சந்தன எண்ணெய், மைசூரு சந்தன சோப்பு, மைசூரு பாரம்பரிய ஓவியங்கள், கன்ஜிபா அட்டைகள், கன்ஜிபா லோகோ, மைசூரு சில்க் லோகோ, கூர்க் ஆரஞ்சு, சென்னபட்டணா பொம்மைகள், கூர்க் பச்சை ஏலக்காய், கூர்க் அரேபிகா காபி ஆகியவைக்கு &'புவிசார் குறியீடு&' அந்தஸ்து கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்