ஜூன் 19ல் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 19 காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில் படித்த வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம், பயோடேட்டா ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.முகாமில் பங்கேற்க விரும்பும் வேலை தேடுவோர் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 94990 55924 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.