உடுமலையில் 2 நாட்களுக்கு நடக்கிறது ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி
உடுமலை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ‘தினமலர்’ சார்பில், உடுமலையில் நாளையும், நாளை மறுதினமும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகளை, கல்வித்துறை வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர். அனுமதி இலவசம்; பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும், முக்கிய வினாக்கள் அடங்கிய ‘ப்ளூ பிரின் ட்’ புத்தகம் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்தில், டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ‘தினமலர் கல்விமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, புரபŒனல் எஜு@கŒனல் டிரஸ்ட், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூசனுடன் இணைந்து நடத்தப்படுகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (15ம் தேதி), பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினமும் (16ம் தேதி), உடுமலை ஜி.வி.ஜி., கலை யரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது; பதற்றமில்லாமல் தேர்வு எழுதுவது; வினாக்களை தேர்வு செய்வது; நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு, நாளை காலை 9.00 மணிக்கும், ஆங்கில வழி மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கும் நடக்கிறது. 16ம் தேதி பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு காலை 9.00 மணிக்கும், கலைப்பிரிவு மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கும் நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்களில் விடையளிக்கும் வழிமுறை, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எளிமையான வகையில் விடையளிக்கக் கூடிய வினாக்களை தேர்வு செய்வது, தேர்வின்போது, விடைகளை நினைவுக்கு கொண்டு வருவது, தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. நாளை மறுதினம் (16ம் தேதி) பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பிரிவில், நேரத்தை சிக்கனப்படுத்தி, சுருக்கமாகவும், தெளிவாகவும் வினாக்களுக்கு விடையளிப்பது மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் ‘சென்டம்’ எடுப்பது, கலைப்பிரிவு மாணவர்களுக்கு கேள்விகளை புரிந்து விடையளிப்பது, தேர்வு நேரத்தில் கவனச்சிதறலை தவிர்ப்பது மற்றும் உயிரியல் பாடங்களில் படங்களின் மூலமே விடைகளை தெளிவுபடுத்துவது போன்ற ஆலோசனை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு, கோவை பீளமேடு சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பங்கஜம், ஆங்கிலம் - மெகருநிஷா, கணிதம் - பாலசுப்ரமணியம், அறிவியல் - மீனலோசினி, சமூக அறிவியல் - மஞ்சுளா உள்ளிட்டோர் ஆலோசனை வழங்குகின்றனர். ஆங்கில வழி மாணவர்களுக்கு, கோவை பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - பாரதி, ஆங்கிலம் - சிந்தியா, கணிதம் - சரவணன், அறிவியல் 1 - ப்ரியா, அறிவியல் 2 - ஹேமலதா, சமூக அறிவியல் - பத்மாவதி ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தமிழ் - ரஞ்சிதம், ஆங்கிலம் - சாந்தா, கணிதம் - தட்சிணாமூர்த்தி, இயற்பியல் - சங்கர் கணேஷ், வேதியியல் - சிவக்குமார், உயிரியல் - ஸ்ரீசுதா, கணக்கு பதிவியல், வணிகவியல் - விஜயலட்சுமி, பொருளியல் - வித்யா, கம்ப்யூட்டர் சயின்ஸ் - வடகோவை கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்வாணி உள்ளிட்டோர் அறிவுரை வழங்குகின்றனர்.கேள்விகளை ஆழ்ந்து படிப்பது; எந்தெந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து படிப்பது; கவனச்சிதறலை தவிர்ப்பது; தேர்வு நேரத்தில் புத்துணர்ச்சியுடன் இருப்பது, தேவையில்லாத தேர்வு பயத்தை நீக்குவது உட்பட குறித்து ‘டீப்ஸ்’ வழங்குவர். மாணவ, மாணவியர், ‘தினமலர்‘ நாளிதழில் வெளியாகியுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நிகழ்ச்சி நடக்கும், அரங்கிற்கு கொண்டு வர வேண்டும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கிய வினாக்கள் அடங்கிய ‘ப்ளூ பிரின்ட்’ புத்தகம் வழங்கப்படும்; அனுமதி இலவசம்.