உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2வுக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு சாத்தியமில்லை

புதுடில்லி: நாடு முழுவதும் பிளஸ் 2வுக்கு ஒரே மாதிரியான பொதுத் தேர்வு நடத்தும் வகையில் திட்டம் எதுவும் இல்லை; மாநில அளவில் நடைபெறும் பொதுத் தேர்வே நீடிக்கும். லோக்சபாவில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறுகையில், ‘தற்போது  மாநிலங்கள் வாரியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து  வருகிறது. இதை மாற்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இப்போதைக்கு அதை செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்றார். முன்னதாக,  மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், ‘கல்வித்தரம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபட்டு உள்ளது. எனவே, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதென்பது சாத்தியப்படாது’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்