உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 விடைத்தாளை நேரில் பார்க்க வாய்ப்பு

சென்னை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 படித்து, கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், ஓ.எஸ்.எம்., எனும் கணினித்திரை வழியாக திருத்தப்பட்டன. அதில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், அதிக மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். அதை பெற்ற பின், மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர்.நேற்று முன்தினம் முதல்கட்ட மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியாகின. அதில், பெரும்பாலான மாணவர்கள், தங்களுக்கு ஏற்கனவே இருந்ததைவிட அதிக மதிப்பெண் கிடைத்துள்ளதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில், “மறுமதிப்பீட்டில், மதிப்பெண்கள் குறைவது, அதிகரிப்பது, மாறாமல் இருப்பது வழக்கமானது தான்.மறுமதிப்பீட்டிலும் திருப்தி இல்லாத மாணவர்கள், சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் விடைத்தாளை ஒருமுறை பார்க்க வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,” என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்