பிளஸ் 2 உடனடித் தேர்வு ஆரம்பம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வு மாணவர்கள் உட்பட, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 602 மாணவர்கள் தோல்வியடைந்தனர். ஒரு பாடத்தில், 70 ஆயிரத்து 175 பேர், இரு பாடங்களில் 36 ஆயிரத்து 459 பேர், மூன்று பாடங்களில், 18 ஆயிரத்து 968 பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கான உடனடித் தேர்வுகள், மாநிலம் முழுவதும் இன்று துவங்குகின்றன. 163 மையங்களில், ஜூலை 2 வரை, தேர்வுகள் நடக்கின்றன. இதற்கிடையே, 10ம் வகுப்பு உடனடித் தேர்வெழுத, தத்கல் மூலம் விண்ணப்பம் செய்ய, இன்று கடைசி நாள். கடந்த இரு நாட்களாக, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். தத்கல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இன்று மாலைக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.