உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பயாலஜி தொடர்பான படிப்புகள் மற்றும் பி.பார்ம் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 6ம் தேதியன்று பயாலஜி தொடர்பான படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு துவங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இந்த கலந்தாய்வில் பங்கேற்றலாம். எம்.பி.பி.எஸ். படிப்புகளில் 54 இடங்கள் காலியாக உள்ளன. ஆயுர்வேத மருத்துவம் அறுவை சிகிச்சைப் பிரிவு படிப்பில் 17 இடங்களும், பிவிஎஸ்சி படிப்பில் 14 இடங்களும் காலியாக உள்ளன. பிடிஎஸ் (பிசியோதெரபி) படிப்பில் 20 இடங்களும், பிஎஸ்சி நர்சிங் படிப்பில் 133 இடங்களும், பி.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னீஷியன் 9 இடங்களும், பி.பார்ம்., படிப்பில் 6 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி துவங்குகிறது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.centacprof.net.in இணையதளத்தைப் பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்