உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 ’ரிசல்ட்’ மே 17ல் வெளியீடு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை, நேற்று அரசு அறிவித்தது. அதன் விவரம்:பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 17 காலை, 10:31 மணி முதல், 11:00 மணிக்குள் வெளியிடப்படும்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 25 காலை, 9:31 மணி முதல், 10:00 மணிக்குள் வெளியிடப்படும்.மாணவர்கள், தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை, மதிப்பெண்களுடன், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களிலும், இலவசமாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்