உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு 4 பள்ளிகளில் தேர்வு மையம் ரத்து

கடலுார்: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் நடந்த முறைகேடு புகாரை தொடர்ந்து 4 பள்ளிகளின் தேர்வு மையங்கள் ரத்து செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் நடத்திய விசாரணையில், கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோவில் ஜி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனையொட்டி மேற்கண்ட நான்கு பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்து சி.இ.ஓ., உத்தரவிட்டுள்ளார்.இப்பள்ளி மாணவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை வேறு மையத்தில் எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்