உள்ளூர் செய்திகள்

குரூப்-2 தேர்வுஅறிவிப்பில் குழப்பம்

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் 2,400 காலிப்பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வுகளை 2008 நவம்பரில் நடத்தியது. இளநிலை பட்டம் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம் என அறிவித்தது. திறந்த வெளிப்பல்கலையில் பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதினர். இதில் 4,300 பேருக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நேர்முகத்தேர்வு நடந்தது. திறந்த வெளிப்பல்கலையில் பெறப்பட்ட பட்டம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பை, 2009 பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குரூப்-2 நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில், திறந்த வெளிப்பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் 278 பேர் உள்ளனர். இவர்களது தேர்வு முடிவுகளை தேர்வாணையம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அரசு பணியாளர் தேர்வாணையம் இந்தாண்டு குரூப்-2 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.திறந்த வெளிப்பல்கலை பட்டதாரிகள் போட்டி தேர்வு எழுத தகுதியற்றவர்கள் என்ற அறிவிப்பு வெளியிடாததால், அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்