டான்செட் 2011 நுழைவுத்தேர்வு
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் எம்.சி.ஏ., / எம்.பி.ஏ.,/ எம்.இ., / எம்.டெக்., / எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., உள்ளிட்ட படிப்புகளுக்கு "டான்செட் 2011' நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் மே 28ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். www.online.annauniv.edu:9080/tancet2011 என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் 300 ரூபாய். ஆதிதிராவிடர்/ பழங்குடியினருக்கு 150 ரூபாய். சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், காரைக்குடி, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 15 இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. விண்ணப்பக்கட்டணத்தை The Director, Entrance Examinations, Anna University என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் "டிடி' ஆக செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ் உள்ள முகவரிக்கு வரும் ஏப். 27ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். முகவரிThe Secretary TANCET 2011, Examination Centre, Anna University, Chennai - 600 025. தொடர்புக்கு: www.annauniv.edu/tancet2011/