உள்ளூர் செய்திகள்

ஜுலை 21 முதல் பி.ஆர்க். கவுன்சிலிங் தொடக்கம்

சென்னை: பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்தும் தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 21ம் தேதி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் கவுன்சிலிங், முதலில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக நடத்தப்படும். பின்னர் 10.30 மணிமுதல் இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆரம்பமாகும். முதல் நாளில், 310.50 கட்-ஆப் முதல், 289.50 கட்-ஆப் மதிப்பெண் வரை கவுன்சலிங் நடைபெறும். ஜுலை 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் பி.ஆர்க். கவுன்சிலிங், கடைசியாக 259.00 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடைபெறுவதுடன் நிறைவடையும். இதர கட்-ஆப் பெற்ற மாணவர்களுக்கான பி.ஆர்க். கவுன்சிலிங் தேதி விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்