உள்ளூர் செய்திகள்

சென்னையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் வரும் 22ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பெரிய அளவில் நடக்க உள்ளது.கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தமிழகம் முழுதும் 100 தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் முகாம் சென்னை மாநிலக் கல்லுாரியில், வரும் 22ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்க உள்ளது. முகாமில், 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 30,000க்கும் மேற்பட்ட, காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், ஐ.டி.ஐ., முடித்தவர்கள் என, அனைத்து தகுதியுள்ள நபர்களும் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். அனுமதி இலவசம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கானப் பதிவு; மாவட்டத் தொழில் மையத்தின் தொழில் மையத்தின், தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள்; மாவட்ட முன்னோடி வங்கி வழியாக, வங்கி கடன் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.முகாமில் பங்கேற்கும், வேலை அளிக்கும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, தகுதியான ஆட்களை தேர்வு செய்யவும். வேலை தேடும் இளைஞர்கள், https://forms.gle/6zc1DiKgeGzSpETK6 என்ற கூகுள் லிங்கில் பதிவு செய்து பயன்பெறவும் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்