வரும் 27ல் திருச்சியில் வேளாண் கண்காட்சி
சென்னை: திருச்சி வேளாண் வணிக கண்காட்சியை வரும் 27ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கஉள்ளார்.வேளாண் இயந்திரங்கள், நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள், புதிய ரகங்கள், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில வேளாண் கண்காட்சி, திருச்சியில் நடத்தப்படுகிறது. திருச்சியில் உள்ள கேர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வரும் 27 முதல் 29ம் தேதி வரை வேளாண் சங்கமம் என்ற பெயரில் பிரமாண்ட கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.விவசாய உற்பத்தியாளர்கள் குழுக்கள் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களும், இதில் பங்கேற்க உள்ளன. வேளாண் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்குகளும் நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் வரும் 26ம் தேதி திருச்சி செல்கிறார்.