நவ., 29 ஊரக திறனாய்வு தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவ., 29 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி, நகராட்சி மற்றும் டவுன்ஷிப் பள்ளிகளில் படிக்கும் ஊரக மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் 50 மாணவர்களுக்கும் 50 மாணவிகளுக்கும் தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக நவம்பர் 4 முதல் நவம்பர் 28 வரை செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தலைமையாசிரியர் அல்லது தொகுதி ஒருங்கிணைப்பாளர் மூலமாக கட்டணம் செலுத்தலாம்.விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் நவம்பர் 28 என தெரிவிக்கப்பட்டுள்ளது.