சந்திரயான்-3 விசிட் செய்த பள்ளி மாணவர்கள்
கோவை: சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்த நிகழ்வை கோவையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், 10 பேர் நேரில் கண்டுகளித்தனர்.சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை, நாடு முழுவதும் இருந்து வருகை புரிந்த, 10 ஆயிரம் பேர் நேரில் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கோவையில், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஐந்து பேர், பள்ளி ஆசிரியர் சக்திவேல் தலைமையில் பார்வையிட சென்றிருந்தனர். தவிர, கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் ஐந்து பேர் என, 10 பேர் நேற்று நேரில் கண்டுகளித்தனர்.மேலும், அங்குள்ள காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இஸ்ரோ ராக்கெட், செயற்கைக்கோள் மாதிரிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வானியல் சார்ந்த அனுபவத்தை இப்பயணம் பெற்றுத்தந்ததாக ஆசிரியர்கள் நெகிழ்ந்தனர்.