டிச., 3ல் மாணவர்களுக்கு கணித திறமை தேர்வு
சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், ஆண்டுதோறும் மாணவ - மாணவியரின் கணித திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டிற்கான கணித திறமை தேர்வு, டிச., 3ம் தேதி காலை 11:00 மணிக்கு நடத்தப்படுகிறது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.மையத்தின் செயலர் இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கூறியதாவது:போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 28ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். தேர்வு நாளில் காலை 10:15 மணிக்குள், மாணவர்கள் ஆஜராக வேண்டும். முதல் பரிசாக ஒருவருக்கு 5,000; இரண்டாம் இடம் பிடிக்கும் இருவருக்கு தலா 2,000; மூன்றாவதாக வரும் மூவருக்கு தலா 1,000; நான்காம் பரிசாக 20 பேருக்கு, தலா 500 ரூபாய் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு 044-2441 0025 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.