சந்திரயான் 3ல் கோவை நிறுவனங்களின் பங்களிப்பு
கோவை: நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 திட்டத்தில், ஏவுகலத்திலும், ரோவர், லேண்டர் உபகரணங்களிலும், கோவை நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, &'சந்திரயான் -3&' விண்கலத்தை நேற்று ஏவியது. விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் சாதனங்களில், கோவையை சேர்ந்த நிறுவனங்களின் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. எல்.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் விண்வெளிப் பிரிவான &'சக்ரதாரா ஏரோ ஸ்பேஸ்&' நிறுவனம், ஏவுகலம் மற்றும் லேண்டர், ரோவர் கருவிகளின் வடிவமைப்பில், உபகரணங்களை வழங்கி பங்களிப்பு செய்துள்ளது.அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சந்திரயான்-3 திட்டத்தில், ஏவுகலத்தைப் பொறுத்தவரை, லிக்விட் புரபல்சன் சிஸ்டம் வடிவமைப்பில் எங்களின் உபகரணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏவுகலம் சுமந்து சென்ற, ரோவர், லேண்டர்களைப் பொறுத்தவரை, ஆர்பிட்டர் ரோவரில், இருவகையான திரஸ்ட் வால்வுகள் 35 பொருத்தப்பட்டுள்ளன. இவை எங்களின் தயாரிப்புகள். சி.இ.,20 இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள 130 பிரஷர் டிரான்ஸ் டியூசர்கள் எங்களின் தயாரிப்புகள் தான். தேசத்தின் வளர்ச்சியில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பும் இருப்பது பெருமிதமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.சக்ரதாரா ஏரோஸ்பேஸ் தவிர, ஜி.டி.என்., மற்றும் எல் அண்டு டி நிறுவனங்களின் உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை தொழில் நிறுவனங்கள், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் பங்களிப்பை அதிகப்படுத்தி வரும் அதேசமயம், விண்வெளித் துறையிலும் பங்களித்து வருவது பெருமிதமாக உள்ளது என, தொழில் அமைப்புகள் பாராட்டியுள்ளன.