உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை

விருதுநகர் காமராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில், மாநில அளவிலான வளாக நேர்காணல் தேர்வு துவக்க விழா நடந்தது. விழாவில், சென்னை அண்ணா பல்கலை  துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: மதிப்பெண் அடிப்படையில் தான் நேர்காணலுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் தனித்திறன் மேம்பாட்டை தான், சாப்ட்வேர் கம்பெனிகள் எதிர்பார்க்கின்றன. தென்மாவட்ட மாணவர்களிடம் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் தற்போது 354 இன்ஜினியரிங் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஆறு லட்சம் இன்ஜினியரிங் மாணவர்களில், 20 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உயர் கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக இருப்பது தமிழகம் தான். இங்கு கல்வியுடன் சேர்த்து வேலைவாய்ப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் மூன்று ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு மன்னர் ஜவஹர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்