உள்ளூர் செய்திகள்

ஜூன் 30ல் மருத்துவ கவுன்சிலிங்

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., பட்டப் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம், மருத்துவ கல்விக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கடந்த மாதம் 16ம் தேதி முதல் வழங்கப்பட்டன. பி.எஸ்சி., (நர்சிங்) பி.பார்ம்., பி.பி,டி., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த 18ம் தேதி முதல் வழங்கப்பட்டன. விண்ணப்பத்தை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் நேற்று கடைசி நாள் என்பதால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்தில் பெற்றோர் - மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. விற்பனை செய்யப்பட்ட 24 ஆயிரம் விண்ணப்பங்களில், 21 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்களும் சேர்க்கப்பட்டு, தரவரிசை பட்டியல் வரும் 21ம் தேதி வெளியிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்