உள்ளூர் செய்திகள்

சீனாவில் 3,500 பேரை வேலைக்கு எடுக்க டி.சி.எஸ்., திட்டம்!

உலக அளவில் பொருளாதார நிலை தேக்கம் அடைந்தாலும் தற்போது நடந்து வரும் திட்டங்களால் ஆசியப் பகுதிக்கான வருவாய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது சீனாவில் உள்ள நான்கு மையங்களில் 1,300 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் ஆக்க திட்டமிட்டுள்ளோம் என்று டாடா கன்ஸல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) ஆசிய பசிபிக் பகுதியின் தலைவர் கிரிஜா பாண்டே தெரிவித்துள்ளார்.ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உள்நாட்டு பி.பி.ஓ., பணிகளுக்காக டியான்ஜின் நகரில் கடந்த மாதம் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்