உள்ளூர் செய்திகள்

டிஎன் ஸ்பார்க் புத்தகங்கள் வந்தாச்சு

கோவை: அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை 'டிஎன் ஸ்பார்க்' திட்டத்தின் கீழ் கற்றுத்தரப்படுகிறது.கோவையில் முதற்கட்டமாக உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்ட 85 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பிரத்யேக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தற்போது மேலும் 138 பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து, கோவை மாவட்டக் கல்வி (இடைநிலை) மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி ஆகியவற்றின் கீழ் உள்ள பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. மாவட்ட கல்வி (இடைநிலை) கீழ் 6ம் வகுப்பிற்கு 149, 7ம் வகுப்பிற்கு 187 மற்றும் 9ம் வகுப்பிற்கு 405 புத்தகங்களும், மாவட்ட தொடக்கக் கல்வியின் கீழ் 6ம் வகுப்பிற்கு 916, 7ம் வகுப்பிற்கு 990 புத்தகங்களும் வழங்கப்படவுள்ளன.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வந்துள்ள புத்தகங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வரவில்லை மாணவர்களுக்கு இப்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் புத்தகங்கள் விநியோகிக்கும் பணி விறுவிறுப்பாகத் தொடங்கும்,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்