உள்ளூர் செய்திகள்

குரூப்-4 தேர்வு: 2வது கட்டமாக ஹால் டிக்கெட் வெளியீடு

இதை 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் கடந்த, 14ம் தேதி www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வுக்கு, முறையாக விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணம் செலுத்தியும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை 19ம் தேதிக்குள் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி தேர்வாணையம் கேட்டுக் கொண்டிருந்தது. அதன்படி 19ம் தேதி வரை விண்ணப்பித்த தேர்வர்களுக்கு தேர்வாணைய இணையதளத்தில் நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்காத தேர்வர்கள் இருந்தால், அவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும், தேர்வாணைய அலுவலரை 23, 24ம் தேதிகளில் அணுகலாம் என டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்