உள்ளூர் செய்திகள்

டிசம்பர் 6ம் தேதி துவங்குகின்றன தேர்வுகள்

சென்னை: சென்னை பல்கலையின், தொலைதுார கல்வி நிறுவன, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன. இதுகுறித்த அறிவிப்பு: சென்னை பல்கலையின், தொலைதுார கல்வி நிறுவன, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன. இந்த தேர்வுகள், வார இறுதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஜன., 18ம் தேதி வரை நடக்கின்றன. தேர்வு, தேர்வு நாட்கள் குறித்த பட்டியல் மற்றும் நுழைவுச் சீட்டுகள், மாதிரி வினாத்தாள்கள், தொலைதுார கல்வி நிறுவனத்தின் www.iodeunom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்