உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வில் 637 கைதிகள் பங்கேற்பு

சென்னை: “சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 637 பேர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்,” என, சிறைத்துறை இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறைகளில், 363 கைதிகள் 10ம் வகுப்பு, 274 கைதிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, 236 கைதிகள், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 130 கைதிகள் தேர்ச்சி பெற்றனர்.தற்போது, 168 கைதிகள் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில், 129 கைதிகள், தமிழக திறந்த நிலை பல்கலையிலும், 39 கைதிகள் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையிலும் படித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்