நவம்பர் 8ம் தேதி மேலூரில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி!
மேலுார்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம் என்று மாணவர்களுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, மேலுார் மூவேந்தர் திருமண மண்டபத்தில் நாளை (நவ.,8) நடக்கிறது. டி.வி.ஆர்., அகாடமி மற்றும் தினமலர் கல்விமலர் வழங்கும் இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பில் பொதுப் பாடத் திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள், முழு மதிப்பெண்கள் எடுக்க முக்கிய வினாக்கள் எவை, படித்ததை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். பாடங்கள் வாரியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்பிற்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ஆண்களுக்கும், காலை 11 மணி முதல் 12.30 மணி வரை பெண்களுக்கும் என இரு நிகழ்வுகளாக நடக்கின்றன. இதில் ஆங்கிலப் பாடம் குறித்து மேலுார் மில்டன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் லெட்சுமணன், கணிதம் குறித்து மேலுார் அல்அமீன் உயர்நிலை பள்ளி ஆசிரியர் அப்துல்ரஹ்மான், அறிவியல் பாடம் குறித்து சென்னை தாசில்தார் பாலாஜி ஆகியோர் பேசுகின்றனர். பிளஸ் 2: பிளஸ் 2 மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி நிகழ்ச்சி நடக்கிறது. ஆங்கிலம் குறித்து சென்னை தாசில்தார் பாலாஜி, கணிதம் குறித்து அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் வினோத், வேதியியல் குறித்து சோழவந்தான் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை அமுதரஞ்சனி, இயற்பியல் குறித்து ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் கணேசன், தன்னம்பிக்கை குறித்து பரவை அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை அமுதா பேசுகின்றனர். மதுரை அழகர்கோவில் லதாமாதவன் கல்வி நிறுவனங்கள், மேலுார் மீனா லேப், பூர்விகா மொபைல் வோல்டு மற்றும் அழகர்கோவில் சாக்ஸ் பொறியியல் கல்லுாரி ஆகியன இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. பங்கேற்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும். மாணவர்களே வாருங்கள்; அனுமதி இலவசம்.