உள்ளூர் செய்திகள்

நவம்பர் 8ம் தேதி குழந்தைகளுக்கான தடகளப் போட்டி

திருப்பூர்: திருப்பூரில், குழந்தைகளுக்கான தடகளப் போட்டி வரும் 8ல் நடைபெற உள்ளது. பெங்களூரை சேர்ந்த எடு ஸ்போர்ட்ஸ் அமைப்பு, குழந்தைகளின் திறன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், விளையாட்டு போட்டி நடத்துகிறது. இவ்வமைப்பு சார்பில், திருப்பூர் மாநகர சி.பி.எஸ்.இ., - மெட்ரிக் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகளுக்கான தடகள போட்டி, குமார் நகர் ஏ.வி.பி., பள்ளியில் வரும் 8ல் நடைபெற உள்ளது. முதல் வகுப்பு பயில்வோருக்கு 25 மீ., ஓட்டம், டென்னிஸ் பால் த்ரோ; இரண்டாம் வகுப்பு பயில்வோருக்கு 30 மீ., ஓட்டம், சாப்ட் பால்த்ரோ; மூன்றாம் வகுப்பு பயில்வோருக்கு 50 மீ., ஓட்டம், சாப்ட் பால்த்ரோ; நான்காம் வகுப்பு பயில்வோருக்கு 50 மீ., ஓட்டம், ஒரு கிலோ மெடிசின் பால் த்ரோ; ஐந்தாம் வகுப்பு பயில்வோருக்கு 75 மீ., ஓட்டம், ஒரு கிலோ மெடிசின் பால் த்ரோ போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப் போட்டி, அனைத்து பிரிவினருக்கும் நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள், முத்திரையுடன் கூடிய பள்ளி முதல்வரின் கையொப்பம் பெற்று, வரும் 3க்குள் தங்களது வருகையை பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரனை 96266 20183 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்