உள்ளூர் செய்திகள்

9ம் வகுப்பு தேர்வு கட்டா? மருத்துவ சான்று கட்டாயம்!

சென்னை: ஒன்பதாம் வகுப்பில், ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்காவிட்டால், மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அனைவருக்கும் தேர்ச்சி முறையில், ஆல் பாஸ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது.அதேநேரம், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்ச்சி வழங்க வேண்டும்.ஆண்டு இறுதித் தேர்வுக்கு வராத மாணவர்கள், மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தவர்களுக்கு, அரையாண்டு, காலாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம். அதேபோல, தேர்வு எழுதும் மாணவர்களின் வருகை, 75 சதவீதத்துக்குக்கீழ் குறையக்கூடாது.அவ்வாறு குறைந்தால், மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்