1 லட்சத்து 35 ஆயிரம் பேர் எழுதும் குரூப்-1 தேர்வு
சென்னை: தமிழகத்தில், அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு மே 5 ம் தேதி(ஞாயிறு) நடக்கிறது. டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ., ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், கோட்ட தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 131 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் குரூப்-1 முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இத்தேர்வை எழுதலாம். மாநிலம் முழுவதும் 33 மையங்களில் தேர்வு நடக்கிறது. 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர்.