உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு பொது தேர்வில் நேஷனல் பள்ளி சாதனை முதல்வர் ரங்கசாமி பாராட்டு

பாகூர்: தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.பள்ளி அளவில், மாணவி சஞ்சனா 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், சாதனா 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி அஸ்விதா மற்றும் மாணவர் முஹமத் ரேஹான் ஆகியோர் 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 72 மாணவர்களுள், 52 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளனர்.கணித பாடத்தில் மாணவர் முகமது ரேஹான், மாணவி சாதனா, அறிவியல் பாடத்தில் மாணவி அஷ்விதா மற்றும் மாணவர் சரண் ஆகியோர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்கள், பள்ளி தலைவர் கிரண்குமார், தாளாளர் எழிலரசி கிரண்குமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.பள்ளி சேர்மன் கிரண்குமார் கூறுகையில், 'கிராமப்புற அளவில் எமது பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், வட்ட அளவிலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் யோகா, கராத்தே, பரதம், சிலம்பம், அபாகஸ் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிரி கே.ஜி., முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த சாதனைக்கு அயராது உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்ளுக்கு நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்