உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வை கண்காணிக்க ட்ரோன் கேமரா

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நடக்கும் முறைகேடுகளுக்கு, கடிவாளம் போட கர்நாடக கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ட்ரோன் கேமரா பயன்படுத்தி தீவிரமாக கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுச் தேர்வில், வட மாவட்ட பகுதியில், காப்பி அடித்தது உட்பட பல முறைகேடுகள் நடந்தன. இது தொடர்பாக, 60 கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. வரும் 2024ல் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத 3,305 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஆலோசனைஇந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அதிகாரிகள் கூறியதாவது:எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் காப்பி அடிப்பது உட்பட, பல விதமான முறைகேடுகள் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, கல்வித் துறை தலைமை செயலர் ரிதேஷ் குமார் சிங் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்வு முறைகேடுகளை தடுக்க, ட்ரோன் கேமரா பயன்படுத்தும்படி, தலைமை செயலர் உத்தரவிட்டார். ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும், வாடகை அடிப்படையில், ட்ரோன் கேமராக்கள் பெற்று, தேர்வில் எந்த முறைகேடும் நடக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வு மையங்களின் சுற்றுப் பகுதிகள் மற்றும் மையங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பு இருக்கும்.அதேபோன்று, போலீசார் சாதாரண உடையில் சென்று, தேர்வு மையங்களில் நடப்பவற்றை, வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். தேர்வு மையத்தின், ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். இதில் பதிவாகும் காட்சிகளை அதிகாரிகள், ஆய்வு செய்ய வேண்டும். தேர்வு மையங்களுக்கு, அதிரடி படை நியமிக்கும் போது, பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள், கிராம கணக்காளர்கள் உட்பட, மற்ற துறைகளின் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வினாத்தாள் பண்டல்களை எடுப்பது, அறைகளில் வைத்து சீல் வைப்பதை, வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கும் போது, தொடக்க பள்ளி ஆசிரியர்களை, தேர்வு அறை மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். பேரூராட்சி மற்றும் தாலுகா அளவில் தகுதியான இடத்தில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். தேர்வை தரை தளத்தில் நடத்தாமல், முதல் மாடியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.ஆடை கட்டுப்பாடுபள்ளி சீருடை அணிந்து வரும் மாணவர்களில் சிலர், துண்டு சீட்டுகளை மறைப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. எனவே, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் ஆடை கட்டுப்பாட்டை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, தேர்வறையில் மாணவர்கள் சாதாரண உடைகள், அரைக்கால் சட்டை, மாணவியர் சல்வார் உடைகள் அணிந்து வர வேண்டும். கட்டாயமாக செருப்பு அணிந்து வர வேண்டும். நகைகள், ஷூக்கள் அணிய தடை விதிக்கப்படும். தேர்வு மையத்தின் சுற்றுப்பகுதிகளில், நகல் எடுக்கும் கடைகளை, தேர்வு முடியும் வரை மூடும்படி உத்தரவிட வேண்டும். தேர்வு முடியும் வரை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு வழி காண்பிக்க, உதவி எண் துவக்க வேண்டும் எனவும் தலைமை செயலர் உத்தரவிட்டுஉள்ளார்.போட்டி தேர்வுகர்நாடகா முழுதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுவதால், இதை, &'காப்பி&' எடுக்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், போட்டி தேர்வு மாதிரியில் வினாக்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் கண்காணிக்க ஏதுவாக, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்