உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு துணைத்தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு

காஞ்சிபுரம்: நாளை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு நாளை தொடங்குகிறது. வருகிற 30ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்