உள்ளூர் செய்திகள்

10 பாடப்பிரிவுகளை மூட 14 கல்லூரிகள் முடிவு

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.ஏ., ஐ.டி.யில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் பாடப்பிரிவுகளையும் மூடுவதற்கு 14 கலை, அறிவியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.இந்தக் கல்லூரிகளில் இந்தப் படிப்புகளை மூடுவதற்கான காரணம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டுள்ளது என்று துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழக்கமாக உள்ள படிப்புகளில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் இல்லாத நிலை உள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளை தொடர்ந்து நடத்த இயலாது என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்து விட்டால், அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்குவது வழக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்