1,071 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை
சென்னை: சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, தேர்வு செய்யப்பட்ட, 1,071 உதவி மருத்துவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று வழங்கினார்.கடந்த ஐந்தாண்டுகளில், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 13,093 பேருக்கும், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில், 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், 17,780 பேருக்கு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிப்படைத் தன்மையுடன் பதவி உயர்வு, பணியிட மாறுதல் என, 59,985 பேர் பயன் பெற்றுள்ளனர்.