11 கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும், மாவட்ட கல்வி அலுவலர்களில், 11 பேர் நேற்று ஓய்வு பெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி பணி மற்றும் பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதே அந்தஸ்து பணியிடங்களில் பணிபுரிந்தோரில், 11 பேர் நேற்று ஓய்வு பெற்றனர்.அந்த பணியிடங்களுக்கு, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, கோவில்பட்டி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய கல்வி மாவட்டங்களில், தொடக்கப் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள்; சங்ககிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகாசி, சேலம் ஆகிய கல்வி மாவட்டங்களில், இடைநிலை கல்வி அலுவலர்கள், பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரையின்படி, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.