12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர கூடாது: ஸ்டாலின் அறிவுரை
சென்னை: 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர கூடாது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகள். 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் மகேஷ் தொடர்பு கொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறிய போது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள்; கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.