123 மாணவர்களுக்கு இன்ஸ்பயர் விருது
கோவை: பள்ளி மாணவர்களின் புதுமையான அறிவியல் சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இன்ஸ்பயர் விருதுகளை வழங்கி வருகிறது.இந்தாண்டு பள்ளிகளிலிருந்து சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு இன்பயர் விருதுக்கு இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இதில், தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,336 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 123 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.சமூக பிரச்னைகளுக்கு, அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை சமர்ப்பித்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 45 பேர் தேர்வாகியுள்ளனர்.ஒரே பள்ளியைச் சேர்ந்த ஜெபக்குமார், வெற்றிசெல்வன், ரித்திஷ் ஆகிய மூன்று மாணவர்கள் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர்கள், கர்ப்ப பாதுகாப்பை மேம்படுத்த குழந்தையின் அசைவுகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, தீ விபத்துகளில் கால்நடைகளை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஸ்மார்ட் நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி கவனம் பெற்றனர்.