15, 16ம் தேதிகளில் மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டு போட்டி
திருப்பூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் ) நடத்தும், 2014-15ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டு போட்டி, வரும் 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ், போட்டியை துவக்கி வைக்கிறார். ராஜிவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் இப்போட்டியில், பொதுப்பிரிவினர் தவிர, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவ., 15ம் தேதி குழுப் போட்டி, 16ம் தேதி தடகள போட்டி நடைபெறும். குழு போட்டிகளில் கபடி, வாலிபால், கூடைபந்து, கோ-கோ, ஹேண்ட்பால், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ் போட்டிகள், டீ பப்ளிக் பள்ளியில் நடைபெறும். ஹாக்கி போட்டி, காங்கயம் கார்மல் கார்டன் பள்ளியிலும்; இறகுப் பந்து போட்டி, மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமியிலும்; டேபிள் டென்னிஸ், நடராஜ் காம்ப்ளக்ஸ் அரங்கிலும் நடைபெறும். தடகள போட்டி, கே.ஜி.எஸ்., மற்றும் டீ பப்ளிக் பள்ளிகளில் நடத்தப்படும்.போட்டிகளில் பங்கேற்பவர்கள், 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் நகல் எடுத்து வர வேண்டும். முதல் பரிசு 350 ரூபாய்; இரண்டாம் பரிசு 250 ரூபாய்; மூன்றாம் பரிசு 150 ரூபாய். பரிசுத்தொகை வங்கியில் செலுத்தப்படும் என்பதால், வங்கி கணக்கு எண் மற்றும் பெயருடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ், எடுத்துவர வேண்டும். போக்குவரத்து செலவுக்கான தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், அலுவலகத்தை, 0421 - 2244 899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.