உள்ளூர் செய்திகள்

நவ.16ல் எம்.பி.பி.எஸ்., தரவரிசை வெளியீடு

சென்னை: &'&'தமிழகத்தில் மருத்துவபடிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைஎனப்படும் ரேங்க் பட்டியல் நவ.,16ம் தேதி வெளியிடப்படும். வரும் 18 அல்லது 19ம் தேதி கவுன்சிலிங் துவங்கும்&'&' என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2.92 லட்சம் பேர் &'108 ஆம்புலன்ஸ்&' வாகனத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுஉள்ளனர். கொரோனா காலத்தில் 7.96 லட்சம் பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சென்னையில் ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் டைம் 8.01 நிமிடமாகஉள்ளது. சர்வதேச தரத்தில் உள்ள நேரத்தை எட்டியுள்ளோம். இன்னும் 200 வாகனங்கள் வழங்க உள்ளோம்.ஊபர் ஓலோ போன்ற வாகனங்களை முன்பதிவு செய்ததும் வாகனங்கள் வருவதை அலைபேசியில் பார்ப்பது போல ஆண்ட்ராய்டு மொபைலில் ஆம்புன்ஸ் வருவதை பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும்.16ல் தரவரிசைமருத்துவ படிப்புக்கு நேற்று முன்தினம் வரை 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பத்தில் தவறு இருந்தால் அதை சரி செய்து கொள்ளும்படி தேர்வுக் குழுவிற்கு மெயில் அனுப்பலாம்.இந்த ஆண்டு 4061 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திட்டமிட்டபடி வரும் 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் ஓரிரு நாளில் 18 அல்லது 19ம் தேதி கவுன்சிலிங் துவங்கும்.மருத்துவ கவுன்சிலிங் உரிய விதிமுறைகளை பின்பற்றி நேரடியாக பெரிய இடத்தில் நடத்தப்படும். உடன் தந்தை அல்லது தாயார் அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளியை பின்பற்றி திட்டமிட்ட எண்ணிக்கை விண்ணப்பதாரர்கள் மட்டும் கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்படுவர்.சான்றிதழ்களை சரி பார்க்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. எந்த தவறும் நடக்காத வகையில் கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 500 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இம்முறை அரசு பள்ளி மாணவர்கள் 304 பேருக்கு எம்.பி.பி.எஸ். - ௯௧ பேருக்கு பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்