18 வயதான மாணவர்கள் வாக்காளர்பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம்: வரும் 2024 ஜன 1ல் 18 வயது பூர்த்தியாகும் ராமநாதபுரம் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தாலுகா அலுவலகம், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2024 ஜன.1 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் உள்ளூர், பிற மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், பெற்றோர் படிவம்- 6 பூர்த்தி செய்து தங்கள்பகுதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் அல்லதுதாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்.ந.25, 26ல் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முகாம் நடக்கிறது. 18 வயதானவர்கள் படிவங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு மையம் எண் 1950ல் தொடர்பு கொள்ளலாம்.