உள்ளூர் செய்திகள்

19 வயதுக்குட்பட்ட கபடி - பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வெள்ளிப் பதக்கம்

வாடிப்பட்டி: தேனியில் நடந்த மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டியில் 19 வயதுக்குட்பட்ட கபடி விளையாட்டில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் ரங்கநாதன் ஆகியோரை தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராமானுஜம், சுந்தரராஜன், மகாலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்