உள்ளூர் செய்திகள்

199 பேருக்கு பணி ஆணை

சென்னை: தரமணியில் நடந்த, ரோஸ்கர் மேளா என்ற திட்டத்தில், 199 பேருக்கு மத்திய அரசில் பணிபுரிய பணி ஆணை வழங்கப்பட்டது.மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தேர்வான ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கும், ரோஸ்கர் மேளா திட்டம், நாடு முழுதும், 44 இடங்களில் நேற்று நடந்தது. சென்னை, தரமணி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் நடந்த விழாவில், 199 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடி, காணொலி வாயிலாக வாழ்த்தி பேசினார்.விழாவில் பங்கேற்ற, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், ரோஸ்கர் திட்டம் வாயிலாக, பல்வேறு துறைகளில் பணிபுரிய, பணி ஆணை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய அரசு துறைகளில், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது, என்றார். விழாவில், சென்னை மண்டல ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் ஸ்ரீனிவாஸ், ஜி.எஸ்.டி., கமிஷனர் தமிழ்வளவன், சென்னை மண்டல சுங்கவரி தலைமை கமிஷனர் ராம்நிவாஸ், சுங்கவரி கமிஷனர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்